‘மூவின மக்களும், ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும், சம உரிமையுடனும் வாழ, புதிய அரசமைப்பு தேவை’

‘அரசமைப்பு உருவாக்கத்திலிருந்து கூட்டமைப்பு பின்வாங்காது’

அரசமைப்பு உருவாக்க் செயற்பாடுகளிலிருந்து, இறுதிவரை பின்வாங்கப் போவதில்லையென, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்தது.

பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை கூடிய அரசமைப்புப் பேரவையில் உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசமைப்பு உருவாக்கத்தில் உள்ள பிரதான தமிழ்க் கட்சி என்ற அடிப்படையில் கூட்டமைப்பு விளங்குவதாகவும் இந்நாட்டின் அரசமைப்பு, அனைவரது ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டது என்ற அடிப்படையில், தமது பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இரண்டுப் பிரதான தரப்புகளும், இதனை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் இந்தப் பொன்னான தருணத்தை இழந்துவிடக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, குறித்த அறிக்கைகள், மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும், பேரவையை வலியுறுத்தினார்.

-tamilmirror.lk

TAGS: