கூட்டமைப்பால் கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றில் ஆளுங்கட்சியாக கருதி செயற்படுமாறு சிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகருக்கு கடிதம் அனுபப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமையவின் தலைவர் உதய கம்மன்பில அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லா விடயங்களிலும் அரசுக்கே ஆதரவளித்து வருவதாகவும் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள கட்சி போல் அது செயற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனடிப்படையில் நாடாளுமன்றில் ஆசன இட ஒதுக்கீட்டின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தாது ஆளுங்கட்சி வரிசையில் அமர்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த கடிதம் தென்னிலங்கையில் ஒருவித பரபரப்பைத் தோற்றுவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

-athirvu.in

TAGS: