கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 14 பேருக்குச்சொந்தமான 21.24 ஏக்கர் காணி இன்று (07) அதன் உரிமையாளரிடம் வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணிகளை இன்று (07-02-2019) அதன் உரிமையாளரிடம் கையளிக்கின்ற நிகழ்வு காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 21.24 ஏக்கர் காணி அதன்உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
-athirvu.in

























