விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் விசுவமடு கோட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் அன்பரசன் (செல்வராசா) என்பவரே கடந்த சனிக்கிழமை இனந்தெரியாத நபர்களின் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை இத் தாக்குதலை தடுக்க வந்த அன்பரசனின் மகனும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான அன்பரசன் ஒரு கலைஞன் ஆவார். 1990 களில் வில்லிசை மற்றும் நாடகங்களின் மூலம் மக்களிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் இருந்தவர்.
பின்னாளில் விசுவமடு கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளராகவும் பின்னர் ஊரக வளர்ச்சித்திட்டத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
உளவில் ரீதியாக பாதிப்பட்ட மக்களிற்கான ஆற்றுப்படுத்தல் மற்றும் உதவிதிட்டங்களை செயற்படுத்தியிருந்தவர். சமாதான காலப்பகுதியில் தென் இலங்கையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டபொழுது அம்மக்களுக்கான உதவித் திட்டங்களை முன்நின்று செயற்படுத்தியிருந்தார். தற்பொது சாரதிகள் பயிற்றுநராக கடமையாற்றி வருவதுடன் சமூக சேவையாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-eelamnews.co.uk