கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு அழிக்கப்பட்ட விதம் தொடர்பில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளையதிகாரி நிமல் லெவ்கே இன்று கருத்துத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள சிங்கள, தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சர்வதேச ஒத்துழைப்பு காணப்பட்டமையினாலேயே அந்த அமைப்பு வலிமைப்படுத்தப்பட்டதாகவும் எனினும், அப்போதிருந்த ஆட்சியாளர்களால் யுத்தத்தின் இறுதிப்பாதியில் சர்வதேச ஒத்துழைப்பு இலங்கை்கு கிடைத்து என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேசத்திடமிருந்து கிடைக்க வேண்டிய அனைத்து ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்வதற்கான இயலுமை, அன்றைய ஆட்சியாளர்களிடம் காணப்பட்டதாகவும் அந்த சாதகத்தன்மையே தமக்கு வலிமையைக் கொடுத்தது. கே.பி. மலேஷியாவில் வைத்து கைது செய்ய முடிந்ததாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.
அவ்வாறான நாடொன்றிடம் கோரிக்கை விடுத்து, ஏதேனுமொரு குற்றத்துடன் தொடர்புடையவரை எமது நாட்டிற்கு அழைத்து வருவதற்கான இயலுமை அப்போது காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் பொருத்தமான இடத்தில் பொருத்தமான அதிகாரிகள் காணப்பட்டமையே, யுத்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ள நிமல் லெவ்கே, அவர்களுக்கு, அரசியல் ரீதியாக தலைமைத்துவம் கிடைத்தால் நிச்சயமாக அதன் பெறுபேறு மகிழ்ச்சியானதாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
-eelamnews.co.uk