விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிற்கு சென்று கலந்து கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகப்பற்றற்ற பங்காளிக்கட்சியாக செயற்படும், ஜனநாயக போராளிகள் கட்சியே இந்த யோசனையை முன்வைத்துள்ளது.
எனினும், அது ஆலோசனை மட்டத்திலேயே இருப்பதாகவும், அடுத்து வரும் ஓரிரு நாளில், தமிழரசுக்கட்சியின் இறுதியான முடிவை எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனநாயக போராளிகள் கட்சி கருத்து கூறியுள்ளது.
இது தொடர்பில் குறித்த கட்சி மேலும் கூறிய விடயம் வருமாறு,
“விடுதலைப்புலிகள் மீது அவர்கள் அங்கு யுத்தக்குற்றங்களை சுமத்தி வருகிறார்கள். ஆனால் அதற்கு தமிழர் தரப்பிலிருந்து முறையான பதில் அளிக்கப்படவில்லை. முன்னாள் போராளிகள், தளபதிகளின் மனைவி, உறவினர்கள்தான் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் யுத்தத்தில் ஈடுபட்ட இன்னொரு தரப்பான விடுதலைப் புலிகள் இதுவரை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சென்று உண்மைகளை எடுத்துரைக்க உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
-eelamnews.co.uk