ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண தமிழ் மிதவாதிகள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்: இரா.சம்பந்தன்

“பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண தமிழ் மிதவாதிகள் எப்போதும் ஒத்துழைப்பை வழங்குவார்கள்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் வரவு- செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கான கூடுதல் கரிசனை குறித்தும் அரசாங்கத்திற்கு பாராட்டுக்களை வெளியிடுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: