எங்களுக்காக போராடியவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய நேரம் இதுதான்; ஒன்றிணையுங்கள் ஈழத்தமிழர்களே!

தமிழர் தாயகம் கோரி கடந்த காலங்களில் ஈழத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் பல தமிழர்கள் பங்குபற்றி தனியீழத்துக்காக போராடிய நிலையில், பல போர் குற்றங்களை நிகழ்த்தி தமிழர்களை கொன்று குவித்தும், பல தமிழர்களை மாற்றுத்திறனாளியா மாற்றியது ஸ்ரீலங்கா இராணுவம்.

அந்த வகையில் கடந்த காலங்களில் போரில் சிக்கி மாற்றுத்திறனாளிகளாக தன்னம்பிக்கையுடன் போராடி வரும் எம் உறவுகளுக்கு துணையாக நிற்கும் நேரம்தான் இது. எங்களுக்காக போராடிய அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இல்லாவிட்டால் யார் இருப்பார்கள்.

ஆகவே கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ் பரா பெஸ்டிவல் ( நிகழ்வு ) இம்முறை BYRON HALL HARROW LEISURE CENTER HA3 5BD பகுதியில் இம்மாதம் வரும் 16-ம் திகதி 12AM – 11.00PM வரை இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு நாம் அனைவரும் சென்று இவர்களை ஊக்கப்படுத்துவதுடன், இவர்களுக்காக நம்மால் முடிந்த உதவியை செய்வது ஒவ்வொரு தமிழனதும் கடமை.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் துணை தமிழர்கள் மட்டும்தான்!

-athirvu.in

TAGS: