வடக்கில் பெண்களை பாலியல் வன் கொடுமைக்குட்படுத்தி வீடியோக்களை எடுத்து பெருமளவு பணத்திற்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகாித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அதிா்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.
ஜே.வி.பியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பிமல் ரத்நாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் நிதியீட்டத்தைக் கொண்டு பாலியல் வன்கொடுமைக் காணொளிகள் பதிவு செய்யப்படும்
மோசமான தொழிற்துறையொன்று வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வா சிப்பு மீதான குழு நிலை விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது
அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், புங்குடுதீவில் பா டசாலை மாணவி வித்தியா பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ப டுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாம் அனைவரும் மறந்திருக்க முடியாது.
இந்த சம்பவத்தை வெறும் பாலியல் வன்கொடுமையாக மட்டும் பார்த்துவிட முடியா து. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டதுடன், அதற்காக பெருந்தொகை பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் வடக்கில் இடம்பெற்று வருகின்றமை பரக சியமானதொன்றேயாகும். இதில் மிகவும் துரதிஸ்டவசமானது என்னவென்றால் அதே சமூகத்தைச் சேர்ந்த புலம்பெயர் மக்களே இந்த கொடூர செயலுக்கு
பணம் வழங்கி வருகின்றனர் என்பதுதான். சிறுமியர் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அந்தக் காட்சிகளை காணொளியாக பதிவு செய்து பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வடக்கில் பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் பயன்பாடு, மதுபான பயன்பாடு மற்றும் வறுமை நிலைமை போன்றன மிகவும் அதிகரித்துள்ளதாக பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
-athirvu.in