தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனிவாவில் சிறீதரன் எம்.பி உரை!

ஜெனிவா வளாகத்தில் இடம்பெறும் இலங்கை தொடர்பான முக்கிய உப குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் கூட்டத்தொடரானது ஆரம்பமாகியுள்ள நிலையில் நாளை குறித்த உப குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

பசுமைத் தாயக அமைப்பானது ஏற்பாடு செய்துள்ள குறித்த உப குழுக் கூட்டமானது ஜெனிவா வளாகத்திலுள்ள குழு அறையில் நாளை நண்பகல் 12 தொடக்கம் 1 மணி வரை இடம்பெறவுள்ளதாக குறித்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கூட்டத்தில் பிரித்தானியா மற்றும் சுவிஸ் நாட்டின் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களான மர்னோல், யூவிஸ் வோவி ஆகியோரும், பசுமை தாயகம் அமைப்பின் பிரதிநிதி மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-eelamnews.co.uk

TAGS: