விடுதலைப்புலிகளை கூண்டில் நிறுத்த திட்டம், துணைபோகுமா ஜனநாயக போராளிகள் கட்சி?

இலங்கைத் தமிழ் மக்களின் பேரழிவாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு நீதிகோரி உலகெங்கும் உள்ள நடுநிலையாளர்கள் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று போராடிவருகின்றனர்.

இவ் அழிவு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமர்வில் பல பிரேரனைகள் முன்வைக்கப்பட்டு இலங்கை அரச படைகள் செய்த தவறுகள் வெளி உலகத்திற்கு கொண்டுவரப்பட்டு குறைந்தபட்ச அழுத்தத்தை இலங்கை அரசுக்கு வழங்கும் பொறிமுறையினை உருவாக்கிவருவதை உணர்ந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் மூலம் புதிய உத்தியை இம்முறை கையாள திட்டம் தீட்டி அதன் பணிகளை ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்திற்காக ஜனநாயகப் போராளிகள் என்ற பெயரில் இயங்கும் முன்னாள் போராளிகளின் குழு ஒன்றை துளசி என்பவரது தலைமையில் ஜெனிவாவிற்கு அனுப்பி தாங்கள்தான் விடுதலைப்புலிகள் என உரிமைகோரி விடுதலைப்புலிகளையும் ஒரு தரப்பாக நிறுத்தி விடுதலைப்புலிகளையும் பொறுப்புக்கூறல் என்ற வலைக்குள் சிக்கவைத்து சிறுவர் போராளிகள் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களை சுமத்தி யுத்தத்தில் இரண்டு தரப்புக்களுமே தவறு செய்துள்ளனர் என்ற கோணத்தில் இரு தரப்பையும் சமரசம் செய்து பொதுச் செயற்திட்டமொன்றினை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பான கோவையை மூடவுள்ளனர்.

இதற்கு தூரநோக்கமற்று ஜனநாய போராளிகள் கட்சியை சேந்த சிலர் ஜெனிவாவிற்கு செல்லும் வாய்ப்பிற்காக தமிழ் மக்களின் நீதிக்கோரிக்கையை வழுவிழக்கச் செய்ய துணைபோவது பலருக்கு வெறுப்பையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

-athirvu.in

TAGS: