ஒவ்வொரு முறையும்,இலங்கைக்கு இரண்டு வருடம் ஏன் ? சிறிதரன் எம்பி கேள்வி

இலங்கை விவகாரத்தில் மிகவும் இறுக்கமான பிரேரணை கொண்டுவரவேண்டுமென நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடமும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று ஜெனிவாவில் தெரிவித்தார்.

ஜெனிவா வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உபகுழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்துவிடப்போகின்றன. வடக்கு கிழக்கு மக்கள் எந்த விதமான ஆரோக்கியமான நடவடிக்ககைளையும் இன்னும் அரசாங்கத்தரப்பிலிருந்து காணவில்லை.

இந் நிலையில் இலங்கையில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லையென ஐ.நா. மனித உரிமை பேரவையின் மூன்று ஆணையாளர்கள் தொடர்ச்சியாக தெரிவித்துவருகின்றபோதிலும் ஒவ்வொரு முறையும் இலங்கைக்கு இரண்டு வருட காலத்தை மனித உரிமை பேரவை ஏன் வழங்கிக்கொண்டிருக்கிறது எனவும் இதன்போது அவர் கேள்வி எழுப்பினார்.

-eelamnews.co.uk

TAGS: