சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை பிரச்சனை கொண்டு செல்லப்பட்டு அங்க சுயாதீனமான, நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என சட்டத்தரணி சுகாஸ் கணகரட்ணம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டதொடரில் இலங்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து ஆதவன் செய்திச் சேவைக்கு ஜெனீவாவில் வைத்து கருத்து வெளியிடும் போதே சட்டத்தரணி சுகாஸ் கணகரட்ணம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் அழுத்தம் கொடுக்க எந்த நாட்டிற்கும் அதிகாரம் கிடையாது. ஆகையால் அங்கு மீண்டும் மீண்டும் தமிழர்களுடைய பிரச்சனையை முன்வைத்து பாதிக்கப்பட்ட தரப்பை மேலும், பாதிப்பிற்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
சர்வதேச நீதிமன்றிற்கு சென்று குற்றமிழைத்த தரப்பிற்கு தண்டனையும், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நியாயத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-eelamnews.co.uk