மியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான காலப்பகுதியில், நாட்டில் வர்த்தம், முதலீடு ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்டிருந்த மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட்டன. இது முரண்பாடுகள் நிறைந்த நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தின் முற்போக்கான நிலை ஏற்படக் காரணமாகியது. குறிப்பாக, முக்கிய உட்கட்டமைப்பு துறைகளில் ஆற்றல் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் பெரும் செல்வாக்குக்கு இந்நிலை வழிவகுத்தது.
சீனா, ஜப்பான், ஆசியான் போன்ற பொருளாதார நிறுவனங்கள் சர்வதேச சமூகத்தால் எழுப்பப்பட்ட மனிதாபிமான அக்கறைகளைத் தாண்டியும், மியன்மாருடனான பொருளாதார உதவி, ஒத்துழைப்பு ஆகியவற்றை அதிகரித்து வருகின்றன. பிராந்தியத்தில் சீனத் தலையீடு, குறிப்பாக ராக்கைன் மாகாணத்தில் பெரிய உள்கட்டமைப்பு, ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்துள்ளமை சர்வதேச கருத்தியல் மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. எனினும், சீனாவை தாண்டிலும், ஜப்பான் சீனாவின் பட்டுச்சாலை முன்முயற்சியை எதிர்க்கும் பொருட்டு, பிராந்தியத்தில் அதன் மேலாதிக்க அபிலாஷைகளை சரிபார்க்க சீனாவுடன் தொடர்ச்சியாகவே போட்டியிடுகிறது.
இதன் விளைவாக, அது 2012இல் இருந்து மியான்மரில் பொருளாதார ஒத்துழைப்பு, நிதி முதலீடு என்பவற்றை கணிசமாகவே அதிகரித்து வருகிறது. ஜப்பானின் ஒட்டுமொத்த முதலீடானது மியன்மாரில் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுவதுடன், 2017இல் மட்டும் அம்முதலீட்டின் அளவு 1.48 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். கடந்தாண்டு ஜூலை மாதம் ஜப்பான் மியன்மாரில் முதலீடு செய்வதில் 10ஆவது இடத்தில் இருக்கின்றது. முதலாவது இடத்தில் தொடர்ந்தும் சீனாவே இருக்கின்றது.
மியான்மாரில் ஜப்பானிய ஈடுபாடு பல்வேறு அடுக்குகளைக் கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் (யாங்கோனில் ரயில் சேவை ஆரம்பித்தல்), திலாவ SEZ திட்டம் – அதன்மூலம் குறிப்பாக நிலக்கரி, சுரங்கத் திட்டங்களில் விருத்தி செய்தல், அதே போல் தொழில்நுட்ப உதவிகளை வழங்களில் ஜப்பான் தொடர்ச்சியாக உதவுகின்றது. மியான்மர் மக்கள் ஜப்பான் தொழில்துறைகள் மியன்மாரில் உருவாகுவதை விரும்புகின்றனர். ஏனெனில், ஜப்பான் மேற்கொள்ளும் நீண்டகால முதலீடுகள் வேலை உருவாக்கம், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி பெற்ற மிகவுமே உதவுகின்றன. மேலும், ஜப்பான் தாராளமாக கடன் வழங்கும் ஒப்பந்தங்களை மியான்மாருடன் கையெழுத்திடுதல், மியான்மார் தொடர்ச்சியாகவே ஜப்பானின் அனுசரணையை பெற வழிவகுக்கின்றது. ஜப்பான் – சீனாவுக்கு எதிரான கொண்டுள்ள பொருளாதார வெறுப்பு நிலை மியான்மாருடன் மட்டுமே நின்றுவிடவில்லை என்பது ஒரு புறமிருக்க, ஆபிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா நாடுகளிலும் குறித்த போட்டி நிலைமை வெளிப்படையாகக் காணப்படுகின்றது.
மியான்மார், சீனாவுக்கு அப்பால் தமது இருப்பை மியன்மாரில் உள்ளதை உறுதி செய்வதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தாலும், மனித உரிமைகள் சம்பந்தமாக வேறுபட்ட பாத்திரத்தை ஏற்றுக் கொள்ள ஜப்பான் தயாராக இருத்தல் அவசியமாகும். குறிப்பாக, பத்திரிகை சுதந்திரம், அது சார்ந்த தடையை நீக்குவதற்கு ஜப்பான் பிரதமர் சூகிக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது ஜப்பானுக்கு அவசியமானதாகும். ஒரு பக்கத்தில், கடந்த ஆண்டு இரண்டு பத்திரிகையாளர்கள் மியன்மார் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டனர் என்பதை தாண்டி, சூகி நீண்ட காலத்துக்கு மனித உரிமைகள் தொடர்பில் அமைதியாக இருத்தல் – அதனை கண்டும் காணாது விடல் என்பது ஜப்பானின் வெளியுறவு கொள்கைக்கு விரோதமானதாகும். இது குறிப்பாக, இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னராக காலப்பகுதியில் ஜப்பான் மனித உரிமைகள் தொடர்பில் மாற்றம் கண்டிருந்த கொள்கைகளுக்கு முரணாக அமைவதுடன், குறித்த நிலையே ஜப்பானை சர்வதேச மட்டத்தில் ஒரு பொருளாதார செழிப்பான நாடாக மாறுவதற்கு வழிவகுத்தது என்பதையும் ஜப்பான் வரலாற்றின் அடிப்படையில் மறக்கவில்லை. மேலும், குறித்த பிராந்தியத்தில் தென்கொரியா, இந்தோனேஷியா ஆகிய மனித உரிமைகளை ஓரளவுக்கு மதிக்கும் நாடுகள் மத்தியில் சீனாவுக்கு எதிராக ஒரு போட்டி நிலைமையை பேணுவதில் சீனா மனித உரிமைகள் தொடர்பாக கொண்டுள்ள கொள்கைகளுக்கு முரணாக, மனித உரிமை ஆர்வலராக தன்னை காட்டுவதில் ஜப்பான் முனைப்பாகவே உள்ளது. அதுவே, குறித்த பிராந்தியத்தில் ஜப்பானை தொடர்ச்சியாகவே ஒரு மேற்கத்தேய நாடுகள் உதவியுடன் பொருளாதார மையமாக அமைய வழிவகுக்கும் என ஜப்பான் நம்புகின்றது.
இந்நிலையில், மியான்மரில் உள்ள மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள் – சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் எதிர்மறையான மதிப்பையே மியன்மார் மீது ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, கடந்தாண்டு ரோகிஞ்சா இனப்படுகொலை தொடர்பாக மியன்மார் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, குறித்த மனிதப்படுகொலைகள் தொடர்பாக ஒரு பொறுப்புக்கூறல் நடைமுறையை இன்னமும் கையாளாத நிலைமை, மேற்கத்தேய நாடுகள் இன்னமுமே தொடர்ச்சியாக மியன்மார் அரசுக்கு பொருளாதார ரீதியில் உதவுவதை விரும்பவில்லை என்பதையே காட்டுகின்றது. இந்நிலையில், ஜப்பான் ஒரு விதிவிலக்கான – பாரியளவில் பொருளாதார உதவிகளை தொடர்ச்சியாக செய்துவருவது ஜப்பானின் வெளிவிவகார கொள்கைகளுக்கு முரணானது என்பதை ஜப்பான் கண்டுகொள்ளாமல் இல்லை.
மனித உரிமைகள் மீறல்களின் விளைவாக, சில ஐரோப்பிய நிறுவனங்கள் மியான்மாரில் இருந்து ஏற்கெனவே வெளியேறத் தொடங்கியுள்ளன. ஜி.எஸ்.பியை திரும்பப் பெற ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்தியுள்ளது. இந்நிலைமையானது, ஜப்பானுக்கு அதன் பொருளாதார உதவி தொடர்பாக ஒரு வலுவான மறு ஆய்வுக்கு செல்லவே வற்புறுத்துகிறது. முதலீட்டு ஊக்குவிப்புகள் பூகோள அரசியல் போட்டிகளுக்கு அப்பால் சென்று நேர்மறையான பிணைய விளைவைக் கொண்டிருப்பதால், மனித உரிமைகள் மீறல்களைப் பொறுத்தவரை, மியான்மரைப் போன்ற நாடுகளை ஜப்பான் போன்ற முதலீடு நாடுகள் தொடர்ச்சியாகவே கண்காணித்தல் அவசியமாகும். மியான்மரில் நிலவும் பொருளாதார செல்வாக்கின் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் இது ஒரு நீண்ட வழிக்கு இட்டுச்செல்லும், என்பதுடன், இந்நிலையே ஜப்பான், ஜனநாயக அடிப்படையிலான ஒரு சுதந்திர மற்றும் திறந்த இந்தியா பசிபிக் வர்த்தக நிலைமையை பிராந்தியத்தில் தக்கவைக்கவும், அதன் மூலம் சீன எழுச்சி எதிர்கொள்ளவும் முடியும்.
-tamilmirror.lk