தமிழர் நிலத்தை அபகரிக்க ஒருபோதும் அனுமதியோம்! – சபையில் மாவை திட்டவட்டம்

“எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்க இடமளிக்கமாட்டோம். இதை அரசு மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா.

இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பல் துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நேற்று நடைபெற்றது.
இந்தக் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காங்கேசன்துறையில் அமைந்துள்ள ராஜபக்ச அரண்மனையை மையமாகக்கொண்டு மேலும் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
புனிதத் தலங்கள் அமைந்திருக்கும் இந்தப் பிரதேசத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் நில அபகரிப்புக்கு இடமளிக்கமாட்டோம்.
எமது புனித பிரதேசங்கள் அமைந்திருக்கும் நகுலேஸ்வரம், கீரிமலை பிரதேசங்களை என்ன விலைகொடுத்தேனும் நாங்கள் பாதுகாப்போம்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் எமது நிலங்களை விட்டுக்கொடுக்க இடமளிக்கமாட்டோம்.
அத்துடன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கத்  தயாராகவுள்ளோம்” – என்றார்.
-tamilcnn.lk

 

TAGS: