இலங்கையை வதைக்கும் வறட்சி; பாதிப்பில் பல்லாயிரம் குடும்பங்கள்

இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

நாட்டின் பல பகுதிகளின் இன்னும் வறட்சியான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அனுமானித்து அறிவித்துள்ளது.

சப்ரகமுவ, வடமேல், வடக்கு, கிழக்கு, மத்திய, மேல், ஊவா உள்ளிட்ட பல மாகாணங்கள் இந்த வறட்சியான வானிலையை எதிர்கொண்டு வருவதாகவும் இந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, அதிக வெப்பமுடைய காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முடியம் வரை நிலவுகின்ற சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமார் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் தொடர் வறட்சி: மின் உற்பத்தி வீழ்ச்சி, 44,000க்கு அதிகமானோர் பாதிப்பு

அதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை அடுத்து, நீர்மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் நீர்மின் உற்பத்தி 90 சதவீதம் குறைந்துள்ளதால் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது 10 சதவீதமான நீர்மின் உற்பத்தியே செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் நாள்தோறும் சூழற்சி முறையில் மின்சாரத்தை நிறுத்துவதற்கு மின்வலு, எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாளாந்தம் சுழற்சி முறையில் மின்சார தடை இருந்து வருகின்றது.

இலங்கையில் தொடர் வறட்சி: மின் உற்பத்தி வீழ்ச்சி, 44,000க்கு அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையினால், நாட்டிலுள்ள மின்சார தேவைக்கு ஏற்ற மின்சாரத்தை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்மின் உற்பத்தி இயல்புக்கு திரும்பும் வரை, மின்சார சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதால் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சேமித்துக் கொள்ளும் சாத்தியம் உள்ளதாகவும் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த மூன்று மாத காலத்திற்கு நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் இரண்டு மின்குமிழ்களை அணைக்கும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் தொடர் வறட்சி: மின் உற்பத்தி வீழ்ச்சி, 44,000க்கு அதிகமானோர் பாதிப்பு

அத்துடன், அரச நிறுவனங்கள், மத ஸ்தானங்கள் மற்றம் வணிக நிறுவனங்களில் மின்சார தேவையை 10 சதவீதம் குறைப்பதற்கும், தேவையேற்படின் மின்குமிழ்களை அணைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வீதி விளக்குகளை வழக்கமாக அணைக்கும் நேரத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே அவற்றை அணைத்து விடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை
இலங்கை

மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

நீர்த்தேக்கங்களை நெருங்கிய பகுதிகளில் நடத்த இருந்த செயற்கை மழைத் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

மழையை உருவாக்கும் வகையிலான காலநிலை காணப்படாததால் இந்த திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன குறிப்பிட்டார்.

தாய்லாந்து நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மலையகத்தில் செயற்கை மழையை பெய்ய செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

எனினும், இத்தகைய நிலைமையயை தொடர்ந்து அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தொடர் வறட்சி: மின் உற்பத்தி வீழ்ச்சி, 44,000க்கு அதிகமானோர் பாதிப்பு

அத்துடன், நீர்மின் உற்பத்தி நடைபெறும் அனைத்து நீர்த்தேக்கங்களையும் நெருங்கிய பகுதிகளிலும் மழை பொழிவு பதிவாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காசல்ரீ, மவுசாகலை, கொத்மலை, விக்டோரியா, ரந்தனிகல, சமனலவெவ, நோர்டன், கெனியன், லக்ஷபான, உக்குவல, ரன்தம்பே, போவத்தன்ன, குகுலேகல மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்மின் உற்பத்தி இடம்பெறும் எந்தவொரு இடத்திலும் மழை வீழ்ச்சி சற்றேனும் பதிவாகவில்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன குறிப்பிட்டார்.

இதேவேளை, காசல்ரீ மற்றும் மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், நீர்த்தேகத்திற்குள் உள்ள பல கட்டிடங்கள் வெளியே தென்படுகின்றன.

பழைய நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கங்களுக்குள் இன்றும் பழைய கட்டடங்கள் பல காணப்படுகின்றன.

இந்த நிலையில், நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், நீர்த்தேக்கத்திற்குள் காணப்படுகின்ற கட்டடங்கள், சிலைகள் தென்படுகின்றன. -BBC_Tamil

TAGS: