இலங்கை வருகிறது ஐ.நா துணைக்குழு

சித்திரவதையைத் தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழுவொன்று, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், குறித்த துணைக்குழு, எதிர்வரும் 2ஆம் திகதி, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் 12ஆம் திகதி வரை, அக்குழு இலங்கையில் தங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்குழுவில், மோல்டோ, மொரிஷியர், சைப்ரஸ், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நால்வர் அங்கத்துவம் வகிப்பதாகவும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெற்ற இரகசியக் கூட்டத்தொடரின் போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் குறித்த குழுவினர், அரசாங்க அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் அமைப்புகளின் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

-tamilmirror.lk

TAGS: