தமிழ் அரசியல் கைதிகள் 54 பேருக்கு மீண்டும் வந்த கொடுமை

தமிழ் அரசியல் கைதிகள் 54 பேர் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் 3 பேர் தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாவும், மேலும் 6 பேர் தொடர்பாக இன்னும் பொலிஸ் விசாரணைகள் முடிக்கப்படாதிருப்பதால் அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று (01) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போது தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: