“வடக்கு- கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மையும் அற்ற வரவு – செலவுத் திட்டத்திற்கு முழுமையான ஆதரவளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர். இது, தமிழ் மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகும்.” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தமது சுயலாபத்திற்காக அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்கள் ஜெனீவா சென்று தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றமை போலி நாடகமாகும். இதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும்.” அவர் குறிப்பிட்டுள்ளார்.
-4tamilmedia.com