ஈழ மக்களை சோகத்தில் ஆழ்த்திய விடுதலைப்புலி தலைவர் ஒருவரின் தாயார்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவராக விளங்கிய வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன் அவர்களின் தாயார் இன்று மாலை காலமாகியுள்ளார்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தனது மகனை உவந்தளித்த பெருமைமிகு தாயாக இவர் கருதப்படுகின்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின பொதுச்சுடரை ஏற்றிய தாயார் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்றைய தினம் இயற்கை எய்தியுள்ளார்.

மேஜர் பசீலனின் பெருமை மிக்க சாதனைகளையும் சேவைகளையும் கௌரவிக்கும் முகமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது கனரக ஆயுதத்துக்கான எறிகணை ஒன்றினை “பசீலன் 2000” என்ற பெயரில் அறிமுகப்படுத்திமை இங்கு குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: