தமிழ் மக்களது அரசியல் தீர்விற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் – சி.வி.கே.

தமிழ் மக்களது அரசியல் தீர்வு, அபிலாஷைகளை பூர்த்தி செய்வது மற்றும் சுயாட்சி உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நிலைநாட்ட இந்தியா பூரண ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று வட. மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “எங்களுடைய மொழியை, கல்வியை, கலாசாரத்தை பாதுகாத்து நாம் ஒரு கட்டமைப்புக்குள் வாழ விரும்புவது இந்தியாவிற்கு தெரியும். இதன் காரணமாக எமது எண்ணங்களை இந்தியா பூர்த்தி செய்யும்.

நாமும் இந்தியாவை குறை கூறுகின்றோம். அது ஆதங்கத்தால் அவ்வாறு கூறுகின்றதேயன்றி அடிப்படையில் நாம் அனைவரும் இந்தியாவை நேசிக்கின்றோம்” என மேலும் தெரிவித்தார்.

-tamilcnn.lk

TAGS: