ஈழத்தமிழனின் திருமணவிழாவிற்கு வருகைதந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்!

ஈழத்தமிழனின் திருமணவிழாவிற்கு வருகைதந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்.

10.04.2019 இன்று தாயகத்தைச் சேர்ந்த மயூரன் – சிந்துஜா ஆகியோருக்கு ஆற்காடு றோட், வடபழனி, சென்னை, தமிழ்நாடு எனும் முகவரியில் அமைந்துள்ள ஆதித்யா மண்டபத்தில் இடம்பெற்ற திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் திடீரென வருகை தந்து மணமக்களை ஆசீர்வதித்து அவர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளார்.

குறிப்பு: மிக வேகமான பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைகளில் காலநேர அவகாசமின்றி முனைப்புடன் களம் சென்றுகொண்டிருக்கும் திரு சீமான் அவர்கள் இத் திருமணத்தில் திடீரென கலந்துகொண்டது அனைத்துத் தாயகத் தமிழர்களை மகிழ்ச்சியிலும் மணமக்களை நெகிழ்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

-athirvu.in

TAGS: