லண்டன் லூட்டன் ஏர்போட்டில் வைத்து 4 இலங்கையர்கள் கைது: புலிகள் தொடர்பா ?

பிரித்தானியா லூட்டன் ஏர்போட்டில் 10ம் திகதி வந்திறங்கிய 4 இலங்கை தமிழர்களை. அடுத்த நாள்(11) பயங்கரவாத பிரிவு பொலிசார் கைதுசெய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்தே இவர்கள் பிரித்தானியாவுக்குள் வந்ததாகவும். இவர்களிடம் இலங்கை பாஸ்போட் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா 2000ம் ஆண்டு கொண்டு வந்த பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக பின்னர் அறிவித்தது யாவரும் அறிந்த விடையம். இன் நிலையில் பிரித்தானியாவின் ஸ்காட்லன் யாட் பிரிவினர் விடுத்துள்ள அறிக்கையில். அதன் அடிப்படையில், தான் இந்த 4 இலங்கையர்களையும் கைதுசெய்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். எனவே இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பிரித்தானிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கருதுகிறார்கள்.

அதிர்வு இணையம் பொலிசாரோடு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை திரட்டி வருகிறது. அதுவரை அதிர்வு இணைய செய்திகளோடு இணைந்திருங்கள்.

-athirvu.in

TAGS: