தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஈழத்தமிழர்கள் எதிர்வரும் 23ஆம் நாள் தாயகம் திரும்பவுள்ளனர்.
சுயவிருப்பின் அடிப்படையில் நாடு திரும்பும் இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
சிறிலங்கன் விமான சேவையின் UL-138, UL-132 , UL-122 விமானங்களின் மூலம், மதுரை, திருச்சி, சென்னை விமான நிலையங்களின் ஊடாக, இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
நாடு திரும்பும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரில், 23 ஆண்களும், 25 பெண்களும் அடங்கியுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
-puthinappalakai.net