அன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இன்று கலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை தாங்கியவாறு உறவினர்கள் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
வவுனியா கந்தசாமி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து அன்னை பூபதியின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதையை தாங்கியவாறு அமைதி ஊர்வலமாக, வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தை வந்தடைந்து அங்கிருந்து கண்டி வீதி வழியாக உண்ணாவிரதம் நடைபெறும் கொட்டகையை வந்தடைந்தனர்.
-eelamnews.co.uk