முள்ளிவாய்க்கால் ஒரு மறக்க முடியாத சோகம்… அங்கே இறந்து போன எமது உறவுகளை வெட்டிப் புதைத்தால் பின்னர் ஒரு காலத்தில் அது ஆதாராமாக அமையும் என்று கருதிய சிங்கள கடைய ராணுவம். அசிட் ஊற்றி உடல்களை உருக்கி அழித்துள்ளது. . மண்ணோடு மண்ணாக்கியுள்ளார்கள் என்ற திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. யூதர்களை நச்சுப் புகை கொண்டு கொன்ற ஹிட்லர். அவர்களது உடலங்களையாவது உறவினர்களிடம் கொடுத்தார். ஆனால் அதனையும் மிஞ்சிய கொடூரம் முள்ளிவாய்க்காலில் மெளனமாக நடந்தேறியுள்ளது. இங்கே நாம் இணைத்துள்ள புகைப்படத்தில். சிறுமி ஒருவரை (ஒரு தளபதியின் பெண் பிள்ளை) கை , கால்களை கட்டியது மட்டுமன்றி.
சலோ டேப்பால் மூக்கையும் சேர்த்து கட்டி, மூச்சு திணறவைத்துக் கொண்றுள்ளது இலங்கை காடை ராணுவம். எப்படி நாம் இந்த துயர நாளை மறக்க முடியும் ? தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.நாவில் என்ன செய்தது ? ஏனைய தமிழ் அமைப்புகள் இதுவரை என்ன செய்தார்கள். அங்கே துடி துடித்து இறந்த எமது உறவுகளுக்கு நிச்சயம் ஒரு நியாயம் கிடைக்க வேண்டும். கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும். எனவே வரும் மே 18 சனிக்கிழமை அனைவரும் லண்டனில் திரண்டு நீதி கேட்டு போராடுவோம். 60 வருடங்களுக்கு பின்னர் தான் யூதர்களுக்கு நியாயம் கிடைத்தது.
அது போல நாம் இன்னும் போராட பல வருடங்கள் இருக்கிறது. மனம் துவண்டு போகாமல், எமது பணியை நாம் செய்வோம். பலன் மெதுவாக தான் கிடைக்கும். இம் முறை பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன் நின்று நடத்துகிறது. மக்கள் திரண்டு வந்து எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட பேரவலத்தை பறைசாற்ற உதவவேண்டும்.
-athirvu.in