சிறிலங்காவுக்கு உதவுவதில் ஐ.நா உறுதி – அன்ரனியோ குரெரெஸ்

சிறிலங்கா மக்களின் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்தும் உதவுவதில் ஐ.நா அர்ப்பணிப்புடன் இருப்பதாக  ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஐ,நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இதன்போதே அவர், சிறிலங்காவுக்கு உதவ தொடர்ந்தும் உறுதி பூண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அமைதியான முனையில் தீர்க்கப்பட்டமை குறித்தும் இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா பொதுச்செயலர் திருப்தி வெளியிட்டார்.

-puthinappalakai.net

TAGS: