முகநூல் பதிவு ஒன்றுக்கு விருப்பம் (Like) தெரிவித்த முன்னாள் போராளி ஒருவர், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால், கொழும்பு காவல்துறை தலைமையகத்தின் நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
தெல்லிப்பழையைச் சேர்ந்த முன்னாள் போராளியே நேற்று தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டார்.
முகநூலில் விடுதலைப் புலிகள் தொடர்பான படம் ஒன்றுக்கு, விருப்பம் தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாகவே, இவரை தீவிரவாத விசாரணைப் பிரிவினர் நாலாம் மாடியில் விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
நேற்றுக்காலை முன்னாள் போராளியிடம், தீவிர விசாரணைகளை முன்னெடுத்த தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெற்றுக் கொண்டு விடுவித்துள்ளனர்.
முன்னாள் போராளிகளின் நடமாட்டங்கள், தொடர்புகள் குறித்து கண்காணித்து வரும் சிறிலங்கா புலனாய்வாளர்கள், அவர்களின் சமூக ஊடக செயற்பாடுகளையும் கண்காணித்து வருகின்றனர் என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் உறுதியாகியிருக்கிறது.
-puthinappalakai.net