கொழும்பில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு: 172 க்கும் மேற்பட்ட மக்கள் பலி- அல்கைடா

கொழுலில் சுமார் 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்கள் வெடித்ததில் 50க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். சற்று முன் நடந்த இந்தச் சம்பவம், கிறீஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. கொழும்பை அண்டியுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனை நடைபெற்ற ஹோட்டல்கள் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது அல்கைடா ஜிகாடிகளின் செயல் என்பது உறுதியாகியுள்ளது. இன் நிலையில் மட்டக்களப்பில் உள்ள தேவாலயத்தில் குண்டை உள்ளே கொண்டு செல்ல முனைந்தவேளை,

குண்டு வெளியே வைத்து வெடித்துள்ளது. இதனால் குண்டை கொண்டு சென்ற நபரும். வெளியே நின்றிருந்த சுமார் 10 பேரும் இறந்துள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, கொழும்பில் உள்ள பல தேவாலயங்களில் பிரார்த்தனைகள் இடம்பெற்றது. இதேவேளை சினமன் கார்டன், ஹோட்டல் கிங்ஸ்பெரி, போன்ற 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் , பிரார்த்தனை இடம்பெற்றது. இந்த இடங்களை குறிவைத்தே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மிகவும் துல்லியமாக திட்டமிட்டே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது என்றும். குண்டை உள்ளே கொண்டுசென்று ஏற்கனவே வைத்துள்ளார்கள் என்று ஆரம்ப கட்ட விச்சரணைகளில் இருந்து தெரியவருகிறது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

-athirvu.in

TAGS: