கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூரும் முகமாக நாளை செவ்வாய்க்கிழமை தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, இன்று திங்கட்கிழமை இரவு 08.00 மணி முதல் நாளை அதிகாலை 04.00 மணி வரை ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-4tamilmedia.com