சிறிலங்காவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களினால் அப்பாவி பொது மக்கள் கொத்து கொத்தாக மடிந்தனர்.
தொடர்ந்து பல பகுதிகளிலும் குண்டுகள் கண்டுபிடிக்கப்படுவதுடன் அவற்றை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் குறித்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ஐ.எஸ் அமைப்பினர் இன்னும் சிறிலங்காவில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
இதையடுத்து இஸ்லாமியர்கள் அணியும் அபாயாவுடன் சில மர்ம நபர்கள் சுற்றி வருின்றனர். அவர்களில் சிலர் வசமாக சிக்கியும் உள்ளனர்.
எனினும் இன்னும் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படும் நிலையில் தமிழ் மற்றும் சிங்கள வர்த்தகர்கள் இணைந்து ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடைகளுக்குள் வரும் போது அபாயாவை கழற்றி விட்டு வருமாறு கதவில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அனைவரதும் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
-athirvu.in