ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை; கலக்கத்தில் முஸ்லீம் அமைப்புக்கள்!

தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாத்தி மில்லத்து இப்ராஹீம் (JMI) ஆகிய அமைப்புக்கள் சிறிலங்காவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் அவசரகால சட்டத்தின்படி குறித்த அமைப்புகளை ஜனாதிபதி தடை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய அவ்வியக்கங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை நாட்டில் செயற்பட்டுவரும் ஏனைய இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளும் அவசர கால கட்டளையின் கீழ் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

-athirvu.in

TAGS: