தற்கொலை செய்யப்போகிறேன் என கூறிய முன்னாள் போராளியின் மனைவி; பதறியடித்து உத்தரவிட்ட மைத்திரி!

வவுணதீவில் பொலிஸாரின் கொலைக்கு தாமே காரணம் என்பதை ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், சந்தேகநபராக கைதுசெய்யப்பட்ட தனது கணவரை விடுவிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்வராதமை குறித்து முன்னாள் போராளியான கதிர்காமதம்பி இராஜகுமாரனின் மனைவி செல்வராணி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

எனினும் வவுணதீவில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் ஐ.எஸ் என்ற சர்வதேச தீவிரவாத அமைப்பின் உளளூர் அமைப்பான தேசிய தௌவீத் ஜமாத் அமைப்புக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மட்டக்களப்பில் நேற்று ஊடக சந்திப்பொன்றை நடத்திய இராஜகுமாரனின் மனைவி செல்வராணி, தந்தை எங்கே என கேட்கும் பிள்ளைகளின் கேள்விக்கு பதில் கூற முடியாத நிலைமைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

பாதுகாப்பு சோதனைகள் என்ற பெயரில் தாம் இதுவரை துன்பங்களை அனுபவித்ததாக குறிப்பிடும் செல்வராணி, கணவர் விடுவிக்கப்படாவிடின் உயிரை துறப்பதே ஒரே வழி எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து இந்த செய்தியை பார்த்த மைத்திரி உடனடியாக முன்னாள் போராளியான இராஜகுமாரனை விடுதலை செய்யுமாறு பணித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரி.

-athirvu.in

TAGS: