ஸ்ரீலங்காவின் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற படுகொலைகளை அரங்கேற்றிய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு ஸ்ரீலங்காவில் நிறுவப்பட்டு செயற்படுவதை அப்போதைய பாதுகாப்பு செயலாளர் நன்கு அறிந்திருந்துடன் அவரது அறிவுறுத்தலுக்கு அமையவே அந்த அமைப்பு செயற்படுத்தப்பட்டதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது.
நாட்டில் காணப்படும் ஸ்தீரமற்ற நிலையினை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அதன் மூலம் அரசியல் இலாபங்களை சம்பாதிக்க முயற்சிப்பவர்களுக்கும், தற்கொலை குண்டுதாரிகளுக்குமிடையே எந்தவொரு வித்தியாசமும் இல்லையென ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
250 பேரினது உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை அடுத்து கொழும்பு அரசியல் களத்தில் மீண்டும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை செலுத்தத் தவறியதாலேயே படுகொலைகள் இடம்பெற்றதுடன் இஸ்லாமிய கடும்போக்குவாதமும் தலைதூக்கியுள்ளதாக கோட்டாபய குறிப்பிட்டிருந்தார்.
அதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்திருந்த கோட்டாபய தான் வெற்றிபெற்றதும் சிறிலங்காவில் தலைதூக்கியுள்ள இஸ்லாமிய கடும்போக்குவாதத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சூளுரைத்திருந்தார்.
இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை மேற்கொண்ட ஐ.எஸ் அமைப்பின் உள்ளூர் முகவர் அமைப்பாக கருதப்படும் தேசிய தௌவீத் ஜமாத் அமைப்பை கோட்டாபய ராஜபக்சவே உருவாக்கியதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது.
நலிந்த ஜயதிஸ்ஸ – “தற்போது ஒவ்வொருவருக்கும் தான் இருந்தால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்றும் தனக்கு அமைச்சுப் பதவியோ அல்லது பாதுகாப்பு செயலாளர் பதவியிருந்தால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது எனத் தெரிவிக்க முடியும். ஆனால் அன்று உளவுப் பிரிவினரின் தகவல் வழங்கபட்டும் தன் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதை அந்த பாதுகாப்பு செயலாளர் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அதேபோல உளவுத் தகவல் கிடைக்கப்பெற்ற போதும் 2012-2013 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இந்த தௌஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள் செயற்பட ஆரம்பமாகின. அதேபோல அவற்றுக்கு தேவையான பள்ளிவாசல்கள் உருவாக்கப்படடன. அப்போதே அவை தொடர்பான உளவுத் தகவல்கள் அப்போதைய பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்க உளவுத் தகவலை பெற்றுக் கொள்ளவாதற்காகவே கோட்டபாய ராஜபக்ச அவ்வாறான அமைப்புக்களை இயக்கினார் எனத் தெரிவித்திருந்தார். அதன் மூலமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவின் அறிவுறுத்தல்களின் பெயரிலேயே இந்த நாட்டில் தௌஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு நிலைநாட்டப்பட்டன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசியல் இலாபங்களை பெற முயற்சிப்பது என்பது அசிங்கமானதொரு செயற்பாடுகளாகும். அது அந்த தற்கொலை குண்டு தாரிகளின் செயற்பாட்டுக்கு ஒத்த செயற்பாடொன்றேகவே நாம் பார்க்கின்றோம”.
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கொடூர குண்டுத்தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சினை தன்வசம் கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ பதவி விலகிய நிலையில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கோட்டோகொட புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சிறிலங்கா ஜனாதிபதியின் உத்தரவை ஏற்று பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பதவி விலகாத நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பிய நிலையில்இ பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த நியமனங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்தஇ குண்டுத்தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் பாதுகாப்பு செயலாளரும்இ பொலிஸ் மா அதிபரும் பதவி விலக வேண்டும் என தெரிவிக்கும் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சராக இருப்பதால் அவரும் பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தினார்.
நலிந்த ஜயதிஸ்ஸ – “21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து ஜனாதிபதியும் அவரின் கீழ் இயங்கும் அரசாங்கமும் இந்த தவறினை பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளரின் பின்னால் அனுப்ப முயற்சித்தது. இந்த உளவுத் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு கீழே உள்ள உளவுப் பிரிவு நிலையத்திற்கே முதலில் வழங்கப்பட்டது. அதிலிருந்தே பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாறாக ஸ்ரீலங்கா பொலிஸாரினால் இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்படவில்லை. பொலிஸூக்கு இந்த தகவல்கள் உளவுப் பிரிவு நிலையத்தினால் வழங்கப்படும் போது அதன் பிரதியொன்று கட்டாயமாக ஜனாதிபதிக்கும் பாதுகாப்ப செயலாளருக்கும் அனுப்பப்படும். அதனால் இங்கு பொலிஸ் மா அதிபரிடம் தவரொன்று இருக்குமெனில்இ அதற்கும் மேலாக பாதுகாப்பு அமைச்சினை தனது பொறுப்பின் கீழ் வைத்திருக்கும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கும் உள்ளது. ஆகையினால் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் மாத்திரம் பதவி விலகாதுஇ பாதுகாப்பு அமைச்சினை தனது பொறுப்பின் கீழ் கொண்டுள்ள ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும். தொடர்ந்து பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் மற்றும் ஜனாதிபதியும் இந்த தவறினை பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மீது சுமத்த திட்டமிட்டனர். ஆகையால் தற்போது பொலிஸ் மா அதிபரும்இ பாதுகாப்பு செயலாளரும் நடந்த உண்மையினை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கின்றேன்.
அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சினை வழங்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
“ஒரு பக்கம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முழு அரசாங்கமும் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு பலவீனம் தொடர்பில் பொறுப்புக்கூறியாக வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் நாடாளுமன்றில் உரையாற்றும் போது அது குறித்து சிறப்பாக கேள்வியெழுப்பினார். பிரதமரையும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரையும் பாதுகாப்பு சபை குழுக்கூட்டத்திற்கு அழைக்காவிட்டால் அவர்கள் மாதக்கணக்கில் அது குறித்து மௌனம் காக்காது குறைந்த பட்டசம் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கேனும் இது தொடர்பில் தெரிவித்திருக்க வேண்டும். எனினும் அவ்வாறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது இவ்வாறு பாரிய தாக்குதல்கள் இடம்பெற்ற பிறகு தற்போது அது குறித்து தெரிவித்து எந்தவித பயனும் இல்லை. சரத் பொன்சேகா யுத்தத்தை சிறப்பாக நிறைவேற்றித்தந்தார். அவருக்கு பாதுகாப்பு தொடர்பில் விசேட அறிவும்இ திறமையும் உள்ளது. அவ்வாறான நிலையில் இந்த அரசாங்கத்தின் இவ்வாறானதொரு விடயப்பரப்பு தொடர்பில் பொறுப்பு கூற முடியுமான நபர் சரத் பொன்சேகா. ஆகையினால் அவருக்கு இதனை பெற்றுக் கொடுப்பதெனின்இ தற்போது உள்ள நிலமைக்கும் மேல் எதனையாவது சிறப்பாக மேற்கொள்வார். எனினும் ஜனாதிபதியிடமிருந்த இந்த பொறுப்பினை நீக்கிக் கொள்ள இந்த நாட்டு மக்கள் இடமளிக்க தயாராக இல்லை. ஏனெனில் நாட்டில் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதிலும் பாதுகாப்பு அமைச்சுக்கென 400 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல முழு வரவு செலவு திட்டத்திலும் 25வீதத்திற்கும் அதிகமான பணம் மக்களின் பாதுகாப்புக்கு என பாதுகாப்பு அமைச்சுக்கும் பொலிஸூக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் வரிப்பணம் செழுத்தும் மக்களுக்காக அவர்களின் வரிப்பணத்தினூடாகவேயே அவர்களின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
-athirvu.in