வடக்கிற்கு இராணுவம் வேண்டுமாம்; அடம்பிடிக்கும் மாவை!

கிளிநொச்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.

இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது,

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, ஆகிய இடங்களில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தீவிரவாதிகளால் தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதனடிப்படையில், கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே வடக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் வடக்கிற்கும் இராணுவ பாதுகாப்பு அவசியமாகின்றது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், புனர்வாழ்வு பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தரப்பினருக்கும் இடையே நேற்று முந்தினம் யாழில் இடம்பெற்ற சந்திப்பை மேற்கோள் காட்டி, முன்னாள் போராளிகளை இராணுவத்தரப்பு இந்த விவகாரதில் உள்ளீர்ப்பது மிகப்பெரிய ஆபத்து எனவும் தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: