யாழ் பல்கலைக்கழகத்தில் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் வைத்திருந்த மாணவர்கள் கைது; மீண்டும் தமிழர் மீது கைவைக்கும் இராணுவம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்களை பொலிஸார் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் போராளிகள் படங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டதையடுத்தே அவர்கள் இருவரும் விசாரணை செய்யப்படுகின்றனர்.

யாழ்ப்பணம் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மாணவர் விடுதி பாதுகாப்பு நடவடிக்கையின் நிமிர்த்தம் சோதனை முன்னெடுக்ப்பட்டது.

அதிகாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்ந நடவடிக்கையில் கவச வாகனம் மற்றும் பேருந்துகள் சகிதம் சுமார் 300 தொடக்கம் 450 வரையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து இராணுவத்தினரின் சப்பாத்துக்கள் ஒரு சோடி மற்றும் தொலைகாட்டி என்பனவும் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

-athirvu.in

TAGS: