மைத்திரி விடுத்துள்ள வேண்டுகோள்; செவி சாய்க்குமா உலகநாடுகள்!

வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து தூதுவர்களும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அந்நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை தற்போது தமக்கு கிடைத்துள்ளதாக, ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய, அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக இடைக்கால அறிக்கை, சட்டமா அதிபரிடம் இன்று (8ஆம் திகதி) கையளிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு வார காலத்திற்கு அறிக்கை தொடர்பில் மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் எனவும் தூதுவர்களுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: