கழிவறைக்குள் ஒளிந்திருந்த குண்டுதாக்குதலின் பிரதான பயங்கரவாதி சிக்கினார்!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும் மில்ஹான் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்பே குறித்த நபர் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தார்.

இலங்கை பொலிஸார் இவரை தேடி தீவிர சோதனையில் ஈடுபட்ட போது இவருடைய பொதி மட்டுமே சவூதியில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் தேசிய தெளஹீத் ஜமாத்தின் பயங்கரவாத குழுவின் ஆயுதப் பிரிவு பிரதானியான தேடப்பட்டு வந்த மில்ஹான் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை சவூதி அரேபியாவின் விமான நிலையத்தில் உள்ள கழிவறைக்குள் ஒளிந்திருந்த நிலையில் இவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த நபரை இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

-athirvu.in

TAGS: