தென்னிலங்கையில் மோதல்; இளைஞர்கள் அட்டகாசம்: ஊரடங்கு உடன் அமுல்; இலங்கையில் மீண்டும் சூழ்ந்துகொண்ட பதற்றம்!

சிலாபத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் அறிவிக்கும் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை அடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இதன்காரணமாக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-athirvu.in

TAGS: