யாழ்ப்பாணத்தில் அண்மையில் பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் தளம் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடையது என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அண்மையில் யாழ்ப்பாணம் ஐந்துசந்திப் பகுதி மற்றும் நாவாந்துறைப் பகுதி ஆகியன பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சோதனைக்கு உள்ளாகின.
இதன்போது ஒஸ்மானியாக் கல்லூரி வீதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வீட்டைச் சோதனையிட்டபோது அங்கு நிலக்கீழ் தளம் ஒன்று அமைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்த ஆரம்ப விசாரணையின்போது போர்க்காலத்தில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்தது என கூறியிருந்தாலும், வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகியிருந்தார்.
எனினும் தற்போது அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது சில உண்மைகள் தெரியவந்துள்ளனர்.
குறித்த நிலக்கீழ் தளம் ஆறு மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாகவும் இதற்கென இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பணம் கொடுத்ததாகவும் பொலிஸாரிடம் அவர் கூறியிருக்கிறார்.
குறித்த நிலக்கீழ் தளத்தில் நிலக்கீழ் அறை மற்றும் சிறைச்சாலை என்பன அமைப்பதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் ஆனாலும் வெறும் நிலக்கீழ் அறையினை மட்டுமே அமைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் கொழும்பைச் சேர்ந்த குறித்த வர்த்தகர் பயங்கரவாத அமைப்புடன் கொண்டுள்ள தொடர்புகள்குறித்து விசாரிக்கப்பட்டுவருவதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
-athirvu.in