உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஷங்ரில்லா விருந்தகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிக்கு சொந்தமான மாத்தளை – கெடவல – ஹதமுனகால பிரதேசத்தில் உள்ள 22 ஏக்கர் காணியை மாத்தளை பிரதேச சபைக்கு உரித்தாக்குவது குறித்து முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் சொத்துக்களை அரச உடமையாக்குதலுக்கு அமைய அந்த காணி மாத்தளை பிரதேச சபைக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற மாத்தளை பிரதேசபையின் அமர்வின் போது, பொது ஜன முன்னணியின் உறுப்பினர் நாலக கோட்டேகொடவினால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.
தற்போது மிளகு செய்கை இடம்பெற்று வரும் குறித்த இடம், குண்டு தாக்குதலை தொடர்ந்து தாக்குதல்தாரிக்கு சொந்தமானது என்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டது.
அங்கிருந்து சந்தேகத்திற்கிடமான எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை.
தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட அஹமட் என்ற நபர் குண்டு வெடிப்புக்கு 6 மாதங்களுக்கு முன்னர் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
-athirvu.in