ஐ.எஸ் தீவிரவாதி சஹ்ரான் உயிருடன்; உறுதிப்படுத்தப்பட்ட தகவல்!

250க்கும் அதிகமான அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குத் தலைமைதாங்கிய ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் மௌலவி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும் என்று ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்வை வைத்திருக்கும் எந்த நபர்களும் குறிப்பாக ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் தமது நாட்டிற்குள் நுழையவில்லை என்பதை இந்திய அரசாங்கம் தெரிவித்திருக்கும் நிலையிலேயே ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி இதனை திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்.

சஹ்ரான் மௌலவி என்பவர் உயிரிழக்கவில்லை என்றும் அவர் கடல்மார்க்கமாக தமிழ்நாடு ஊடாக இந்தியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டார் என்பது விசாரணை ஊடாக தெரியவந்திருப்பதாக இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்திருந்தார். எனினும் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியின் இந்தக் கருத்தை முற்றாக நிராகரித்திருக்கும் இந்திய அரசாங்கம், ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்த தீவிரவாதிகளும் தமது நாட்டிற்குள் நுழையவில்லை என்று திட்டவட்டமாக நேற்றைய தினம் தெரிவித்திருக்கின்றது.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் யுத்தவெற்றியின் தசாப்தக் கொண்டாட்டம் தொடர்பாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பபில் இராணுவத் தளபதி இதனைத் தேரிவித்தார்.

-athirvu.in

TAGS: