பயங்கரவாதிகளின் 1000 கோடி சொத்துக்களை முடக்கி அரசவுடமை ஆக்கவுள்ள இலங்கை அரசு!

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களின் பத்தாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை குற்றவியல் திணைக்களம் அரசுடமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி குற்றவியல் திணைக்களம் இந்த அமைப்பின் காணிகள், பயிற்சி முகாம்கள், தங்கநகைகள் மற்றும் பிற சொத்துக்களை அடையாளம் கண்டுள்ளது.

இதுவரை தேசிய தவ்ஹீத் அமைப்பின் 89 உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்த சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அத்துடன் பில்லியன் கணக்கான பணம் வெளிநாடுகளில் இருந்து இவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்புச் செய்யப்பட்டதனையும் குற்றவியல் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலும் சொத்துக்கள் இருந்தால் அவற்றையும் கைப்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது.

-athirvu.in

TAGS: