ஐ.எஸ் அமைப்பு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி இலங்கையில் தனது முதல் அடியை வைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பை அடிப்படையாக கொண்டு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இஷாக் அஹமட் மொஹமட் என்பவர் ஓமானுக்கு சென்று துருக்கி ஊடாக சிரியா சென்றுள்ளார். அங்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இலங்கை தலைவராக இணைந்துள்ளார்.
அபு ஹம்சா செய்லானி என அந்த அமைப்பினால் அவருக்கு பெயரிடப்பட்டது. குடும்ப உறுப்பினர்களுடன் சிரியா சென்று மதத்துக்காக உயிர்த் தியாகம் செய்ய வேண்டும் என்பதே அவரது எண்ணமாகும்.
இஷாக்கின் சகோதரர் நிலாம் (அபு சுனயீர் செய்லானி) உட்பட குடும்பத்தின் 38 பேர் அந்த வருடமே சிரியா சென்றடைந்துள்ளனர்.
குடும்பத்துடன் உயிர்த் தியாயம் செய்ய வேண்டும் என்பதே இவர்களதும் நோக்கமாகும். இந்த குடும்பத்தினர் சிரியாவில் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபடும் போது இலங்கையில் பயங்கரவாதம் தலை தூக்க ஆரம்பமாகியுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
-athirvu.in