சில நாடுகள் யுத்தத்தை நிறுத்துமாறு விடுத்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே நாம் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்தை வெற்றிகொண்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விஜேராமவிலுள்ள தமது இல்லத்திலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினால் எமக்கு பல உதவிகள் கிடைத்தன. அமெரிக்கா உதவியதன் காரண மாகவே, 2006ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்த முடிந்தது.
அமெரிக்காவினால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் காரணமாகவே, 2007இல் புலிகள் அமைப்பின் ஆயுதக் கப்பலை அவுஸ்திரேலியா, இந்தோனேஷியாவுக்கு அண்மித்த கடற்பரப்பில் எம்மால் அழிக்க முடிந்தது.
எனினும், 2009 பெப்ரவரி மாத்திலிருந்து அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட்டார். அதன்போது அவர்களின் எண்ணக்கரு மாற்றமடைந்தது.
எனினும், நாம் சர்வதேச அச்சுறுத்தல்களைக் கருத்தில்கொள்ளாது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தோம்.
இலங்கையில் யுத்தம் முடிந்ததன் பின்னர் இந்நாட்டில் அமைதி உருவாவதற்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகள் இடமளிக்கவில்லை.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து கடந்த காலத்தை நினைவூட்டி, எவ்வகையிலேனும் மோதலைப் பேணுவதையே அவர்கள் முன்னெடுத்தனர்.
தம்மை செவிமடுக்காது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக பிரச்சினையை ஏற்படுத்தினர்.
சீனா எமக்கு உதவுகின்றது என்பதும் அவர்களுக்கு பிரச்சினையாக இருந்ததாகவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தமிழிலும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
-athirvu.in