இலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்தது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் ஆற்றல் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் காவல்துறையினருக்கும் இருப்பதாக, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து போர் வெற்றி கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற மைதானத்தில் நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
26 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த புலிகளின் பிரிவினைவாத தீவிரவாதத்தை, ஒரு இலட்சம் இந்திய அமைதிப்படையினரால் கூட தோற்கடிக்க முடியாதிருந்த நிலையில், எமது வீரம்மிக்க படையினர் அவர்களைத் தோற்கடித்திருந்தனர்.
அதேபோன்று, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் சக்தி எமது புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் காவல்துறையினருக்கு இருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-athirvu.in