விரைவில் விடுதலையாகவுள்ளாரா ஞானசார தேரர்? கதிகலங்கும் முஸ்லிம்கள்!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறிலங்கா ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கல் திட்டத்தின் கீழ் 762 சிறைக்கைதிகள் கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். அதன் போது சிறைச்சாலையில் ஞானசார தேரரையும் சந்தித்திருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அவரை விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியை சந்தித்த தேரர் நாட்டின் தீவிரவாத செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் விரிவாக கூறியுள்ளார். அத்துடன் தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராக அனுமதி கோரினார். அதன்போது சாட்சியமளிக்க ஏற்பாடுகளை செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்கள ஆலோசனை கிடைத்த பின்னர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

-athirvu.in

TAGS: