இலங்கையை சேர்ந்த குழு ஒன்றே தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்தது; அதிர்ச்சி தகவல்!

குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐஸ்.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்திருக்கவில்லை.

மாறாக, இலங்கையைச் சேர்ந்த குழு ஒன்றே தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்தது எனத் தோன்றுவதாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ராண்ட் கோப்ரேஷனுக்காகப் பணியாற்றும் வெளியுறவுக்கொள்கை நிபுணரான ஜோனா பிளான்க் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தீவிரவாத செயலுக்காக இஸ்லாமிய இயக்கத்தை தெரிவு செய்ததை உலகின் வேறு பகுதிகளில் நடந்திருக்க முடியும்.

ஆனால் இங்கு அவ்வாறு செய்தவர்கள் இலங்கையர்களாக இருக்கின்றார்கள்.

அவர்கள் தங்களது பயிற்சிகளையும், உபகரணங்களையும் ஐ.எஸ் இடமிருந்தே பெற்றுள்ளார்கள்.

இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிப்படையாகவே தங்களுக்குள் மோதிக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவர்களால் ஒத்துழைத்துச் செயற்பட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: