முஸ்லிம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் வாழும் பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைளை முன்னெடுக்க, பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
முஸ்லிகள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகம் காணப்படுகின்றது.
இதனால் முஸ்லிம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் வாழும் பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைளை முன்னெடுக்க, பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால், முஸ்லிம் மக்கள் மீதான சிங்கள மக்களின் சந்தேகம் நீங்கும்.
நாட்டின் பாதுகாப்புக் கருதி, தேசிய பாதுகாப்புச் சபை ஒன்றை நியமிக்க, ஜனாதிபதி தீர்மானித்திருப்பாகவும் இம்மாத இறுதியில், இச்சபை கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
-athirvu.in