உயிர்த்த ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷீம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சுமார் 4000 சிங்களத் தாய்மார்களை மலட்டுத்தன்மைக்கு உட்படுத்தியிருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள நாளிதழ்களில் இன்றைய தினம் வெளியான செய்தி தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் திவயின வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவின் கவனத்துக்கு கொண்டுசென்ற ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கஇ இதுகுறித்து விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியதை அடுத்து உடனடி விசாரணைக்கு சபாநாயகர் பணிப்புரை விடுத்திருக்கின்றார்.
துரிதகதியில் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை நாளைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார். ‘திவயின என்கிற சிங்களப் பத்திரிகை இன்றைய தினம் செய்தி ஒன்றை பிரசுரித்திருக்கிறது. தவ்ஹீத் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சுமார் 4000 சிங்களத் தாய்மார்களை மலட்டுத்தன்மைக்கு உட்படுத்தியிருப்பதாகவும்இ ஆதாரங்கள் அம்பலமாகியிருப்பதால் அவரைக் கைது செய்ய முயற்சி இடம்பெறுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியில் உண்மை இருந்தால் அது பாரதூரமானதாகும். இந்த செய்தியினால் பலரும் முஸ்லிம் மருத்துவர்களையும் நாடமுடியாத அச்சமான நிலை தோன்றலாம். அதனால் இது மக்களிடையே சந்தேகத்தையும் மோதலையும் ஏற்படுத்தும் செய்தியாகும். வைத்தியசாலைகளில் பணிபுரியும் முஸ்லிம் மருத்துவர்களை சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்க்கின்ற மற்றும் அவர்களை அங்கிருந்து துரத்திவிடுகின்ற துரதிஷ்டவசமான சூழ்நிலையும் உருவாகலாம். இந்த மருத்துவர் மகப்பேற்று சத்திரசிகிச்சை 7000 செய்திருப்பதாகவும் அதில் 4000 தாய்மாரை மலட்டுத்தன்மைக்கு உட்படுத்தியிருப்பதாகவும் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. இதில் எது உண்மை என்பது சந்தேகமாக உள்ளது.
இதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணை நடத்தப்படுகிறதா? அந்த மருத்துவர் யார்? எந்த வைத்தியசாலை? அவருடைய பெயர் என்ன என்று செய்தியில் கூறப்பட்டிருக்கவில்லை. அப்படியில்லாவிட்டால் இந்த இனவாத தகவல் குறித்து தெளிவுபடுத்தல் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் கூறப்பட வேண்டும் என்பதை
கோருகின்றேன்’ என்றார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய ‘நான் இன்று காலை இந்த செய்தியைப் பார்த்தவுடன் பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசியில் உரையாடினேன். அதேபோல புலனாய்வு பிரதானிகளுடனும் கலந்துரையாடினேன். இதுகுறித்து தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று பதிலளித்தார்கள். இதுகுறித்து விசாரணை நடத்தவும் கோரியதோடுஇ இரகசிய பொலிஸாரிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பதாக பதிலளித்தார்கள். மேலும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருக்கும் இன்னுமொரு நபர் நாடாளுமன்றத்தில் பணியாளராக இருப்பதாக வெளிவந்த தகவல் குறித்தும் அவர்களிடம் கேட்டபோது அந்த தகவலில் உண்மை இல்லை என்றார்கள்’ என்றார்.
சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவும் இந்த செய்தி தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி கோருகின்றேன். இது அரசாங்கத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாரிய அகௌரவப்படுத்தலாகும்’ எனத் தெரிவி த்தார்.
-athirvu.in